Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா ஏ9 வீதியில் கோர விபத்து

February 5, 2020
in News, Politics, World
0

வவுனியா கண்டி வீதியில் இன்று   மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த இரு துவிக்கரவண்டி மீது பட்டா ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் மற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் இரு துவிச்சக்கரவண்டிகளும் பட்டா ரக வாகனத்தின் சில்லினுள் அகப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பட்டா ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post

மகாத்மாகாந்திக்கு காத்திருந்து அஞ்சலி செலுத்திய வெள்ளைக்காரப் பெண்

Next Post

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும்

Next Post
1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும்

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures