வவுனியா, சூடுவெந்தபுலத்தில் நேற்று மதியம் நடந்த விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.
பேருந்தும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து செட்டிக்குளம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது என்று கூறப்படுகின்றது.
விபத்தில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

