வவுனியாவில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (12) காலை வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவுத்தூபிக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்துடன், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவித்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் போராளிக் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் சார்ந்தோர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.








