வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நேற்று (05) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 500 கிராம் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மாலை புதிய பேருந்து நிலையத்தில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டு பயணி ஒருவரின் பையில் இருந்து ஒரு கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவினை கண்டு பிடித்தனர். இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

