பன்முகத்தன்மை இன்று நெருக்கடியில் உள்ளது. உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வி வளரும் நாடுகளை மிகவும் பாதிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய ஆளுகையின் கட்டமைப்பு இரண்டு செயல்பாடுகளைச் செய்வதாக இருந்தது.
முதலாவதாக, போட்டியிடும் நலன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் எதிர்கால போர்களைத் தடுப்பது. இரண்டாவதாக, பொதுவான நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது.
ஆனால் நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், தொற்றுநோய் மற்றும் போர்கள் ஆகியவை உலக நிர்வாகம் ஆகிய விடயங்களில் தற்போது தோல்வியடைந்துள்ளமையை காண கூடியதாகவுள்ளது. இவை அண்மைய அனுபவங்களாக உள்ளன.
இந்த தோல்வியின் சோகமான விளைவுகளை பெரும்பாலும் வளரும் நாடுகள் எதிர்கொண்டுள்ளது. பல வருட முன்னேற்றத்திற்குப் பிறகு நிலையான வளர்ச்சியை உலகம் கைவிடும் அபாயத்தில் உள்ளது. பல வளரும் நாடுகள் தங்கள் மக்களுக்கு உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கும் போது தாங்க முடியாத கடனுடன் போராடி வருகின்றன.
இவ்வகையான கொந்தளிப்பின் போது உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் உடைந்துள்ளன. எந்தவொரு தரப்பும் அதன் முடிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்காமல் உலகளாவிய தலைமைத்துவத்தை கோர முடியாது. ஜி20 ஊடாக உலகளாவிய தெற்கிற்கு குரல் கொடுக்க இந்தியா முயற்சிக்கின்றது.
இன்றைய கூட்டம் ஆழமான உலகளாவிய பிளவுகளின் போது நடைபெறுகிறது. வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு என்பதால், புவி-அரசியல் பதட்டங்களால் விவாதங்கள் பாதிக்கப்படுவது இயல்பானது.
இந்தப் பதட்டங்களை எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நம் நிலைப்பாடுகள் மற்றும் நமது முன்னோக்குகள் அனைவருக்கும் உள்ளன. உலகின் முன்னணி பொருளாதாரங்கள் என்ற வகையில், இந்த அறையில் இல்லாதவர்களுக்கான பொறுப்பு ஜி20 நாடுகளிடமே உள்ளது என்று வலியுறுத்தினார்.