விஜய், அஜித் ஆகியோர் படங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளியில் வந்தால் அதில் எது ரசிகர்களிடம் அதிகம் பாப்புலர் ஆகிறது என்பதில் கடும் போட்டி நிலவும். இரு தினங்களுக்கு முன்பு விஜய்யின் 64வது படத்தின் தலைப்பாக ‘மாஸ்டர்’ படம் அறிவிக்கப்பட்டது. அந்த தலைப்பு டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.
#Master ஹேஷ்டேக் பயன்படுத்தி 3.43 மில்லியன் பதிவுகள் டுவிட்டரில் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் அதிகமான பதிவைப் பெற்ற படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு வலிமை ஹேஷ்டேக் #Valimai புரிந்த 3.03 மில்லியன் சாதனையை மாஸ்டர் ஹேஷ்டேக் முறியடித்துள்ளது. இதற்கு முன்பு பிகில் ஹேஷ்டேக் #Bigil புரிந்த 2.1 சாதனையை வலிமை முறியடித்திருந்தது.
விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் இந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் மாறி மாறி முந்திக் கொண்டு வருகிறார்கள். ‘வலிமை, மாஸ்டர்’ இரண்டு படங்களும் வெளிவரும் வரை இந்த போட்டி இனி அடிக்கடி இருக்கும்.

