வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.யு.பீ. கறலியத்த இந்த தீர்ப்பை இன்று வழங்கினார்.
வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளர் ஜகத் குமார சமரஹேவா மற்றும் வலப்பனை பிரதேச செயலக முன்னாள் சாரதி பி. ஜடில லால் ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டில் விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வாகனம் ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி ஒன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வலப்பனை பொலிஸார் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 105 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

