வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டதாக ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அங்கு அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுராதபுரம் ஷ்ராவஸ்திபுர பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியின் காரணமாக 20 மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
