Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வர்த்தமானியை வெளியிட்டு விட்டு மைத்திரி படும்பாடு

December 2, 2018
in News, Politics, World
0

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டு­கின்­றது என்று வெளி­யிட்ட அர­சி­தழை மீளப் பெறு­வது தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றார் என்று ரொய்­ டர்ஸ் செய்­திச் சேவை தெரி­வித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­கள் மீதான தீர்ப்­புத் தமக்­குப் பாத­க­மாக அமை­யக் கூடும் என்ற அச்­சம் கார­ண­மா­கவே அரச தலை­வர் இது தொடர்­பாக ஆராய்ந்து வரு­கின்­றார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­கள் மீதான விசா­ரணை எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. அதற்கு முன்­ன­தா­கப் பெரும்­பா­லும் 5ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டது என்று அறி­விக்­கப்­பட்ட அர­சி­தழ் அறி­விப்பை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீளப் பெறு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அன்­றைய தினம் நாடா­ளு­மன்­றத்­தில் புதிய தலைமை அமைச்­சரை நிய­மிக்­கக் கோரும் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கூட்­ட­மைப்­பி­டம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­துள்­ளார். அந்­தத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டால், அதற்கு அமை­வா­கச் செயற்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார். இத­னால், நாடா­ளு­மன்­றக் கலைப்பு அர­சி­தழ் அறி­விப்பை அவர் மீளப் பெறக் கூடும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற சந்­திப்­பி­லும், நாடா­ளு­மன்­றக் கலைப்­புக்கு எதி­ராக தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­கு­கள் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வலிந்து பேச்சை ஆரம்­பித்­துள்­ளார். அந்த வழக்­கு­கள் மீளப் பெறப்­பட வேண்­டும் என்று சாரப்­பட அவர் கருத்­து­ரைத்­துள்­ளார்.

உயர் நீதி­மன்­றம் தனக்­குப் பாத­க­மா­கத் தீர்ப்­ப­ளித்­தால் அதா­வது அர­ச­மைப்பை அரச தலை­வரே மீறி­ய­தா­கத் தீர்ப்பு வழங்­கி­னால், அது பெரும் பாதிப்பு என்று கரு­து­வ­தால் அர­சி­தழ் அறி­விப்பை மீளப் பெறும் முயற்­சி­யில் அவர் இறங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

Previous Post

தமிழ்க் கூட்­ட­மைப்புக்கும் பங்­கா­ளிக் கட்­சிகளுக்கும் இடையில் முறு­கல்!

Next Post

கண்ணீரில் மூழ்கியது பெரியநீலாவணை ! 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்

Next Post

கண்ணீரில் மூழ்கியது பெரியநீலாவணை ! 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டு தினேஷின் பூதவுடல் நல்லடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures