தெஹிவளையில் 3336 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளிடமிருந்து 278 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தெஹிவளை பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெங்களூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தை வந்தடைந்த இந்நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அந்நபரையும் அவரது பயணப் பொதியையும் சோதனையிட்டபோதே இப்போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டன.
பயணப் பொதியின் அடியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ மற்றும் 280 கிராம் நிறைகொண்ட போதைப் பொருளே இதன்போது மீட்கப்பட்டுள்ளன. இவை இரண்டு பக்கற்றுகளாக பொதிசெய்து மறைத்து வை்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.