ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினர் இன்று பகல் 12 மணியளவில் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்கள்.
வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மாவனெல்ல மெடிரிகம வித்தியாலத்திற்குள் பலவந்தமான முறையில் சென்று ஆசிரியர் மற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவனெல்ல பேராதெனிய சபையின் உப சபாபதி கே.ஜி.ஜயதிஸ்ஸவை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிடின் அதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினரது ஆரப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அமைதியான போராட்டத்தை அரசியல் அதிகாரத்தை கொண்டு முடக்க முயற்சித்தால் பல விளைவுகளை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மாவனெல்ல மெடிரிகம வித்தியாலத்திற்குள் பலவந்தமான முறையில் சென்று ஆசிரியர் மற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவனெல்ல பேராதெனிய சபையின் உப சபாபதி கே.ஜி.ஜயதிஸ்ஸவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து ஆசிரியர்களை, பெற்றோரை அச்சுறுத்தும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அவரை கைது செய்து முறையான விசாரணைகளை முன்னெடுக்காவிடின் அதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றினைந்த சங்கத்தினர் இன்று நாவல – திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்கள்.
எதிர்வரும் 09ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் அனைத்து கல்வி வலய மட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். அத்துடன் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று பாரிய போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]