வரவு செலவுத் திட்டத்துக்குப் பகரமாக முன்வைக்கப்படும் இடைக்காலக்கணக்கறிக்கை அரச நிதி எந்தவிதத்திலும் மோசடி செய்யப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவிருப்பதாலேயே 2020ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது முதல் காலாண்டுக்கான இடைக்காலக்கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் அரசாங்க நிதி எந்த விதத்திலும் மோசடியாகப் பயன்படுத்தப்படாது.
பிரதமர் கேள்வி நேரத்தில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.