நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘V3’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அமுதவாணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘V3’. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமாரோடு இணைந்து பாவனா, எஸ்தர் அனில், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு அலென் செபஸ்டியன் இசையமைத்திருக்கிறார்.
சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண் வழங்கும் தீர்ப்பை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படத்தை டீம் ஏ வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் அர்த்தமுள்ள தோற்றமும், அதன் பின்னணியில் அரசியல் கட்சியொன்றின் ஊர்வலமும் இடம்பெற்றிருப்பது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.