யாழ். மீசாலை பகுதியில் பிட்டினை உணவாக உட்கொண்ட 74 வயது வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) குறித்த வயோதிப் பெண் காலை உணவாகப் பிட்டினை உட்கொண்டுள்ள நிலையில், பிட்டுத் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து பிட்டு உட்கொண்ட சிறிது நேரத்தில் மூச்சு விடுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டுள்ள நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட, வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

