“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதர்வர் ஆர்னோல்ட், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.
“வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோம்” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட கிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பு இந்தச் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.