தமக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய மாணவர்கள் முன்வர வேண்டும். விழிப்புணர்வு அடைய வேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
பாடசாலை மாணவிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் மாவட்ட செயலகத்துக்குக் கிடைக்கின்றன. அவை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவால் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்படும். பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
இப்படியான தொந்தரவுகள் தொடர்பில் மாணவர்கள் இரகசியமாகத் தமது முறைப்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பதிய முடியும். உரிய முறையில் செய்யப்படும் முறைப்பாடுகளுக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களும், பாடசாலைச் சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாணவர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். – என்றார்

