தென் ஆப்பிரிக்காவில் வனப்பகுதியில் சுற்றுலா சென்றவர்களை காண்டாமிருகம் ஒன்று ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டியடித்தது.
குரூகர் தேசியப் பூங்காவில் சில சுற்றுலாப் பயணிகள் திறந்த ஜீப் வாகனத்தில் அங்கிருந்த விலங்குகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடும் கோபம் கொண்ட காண்டாமிருகம் ஒன்று ஜீப்பில் வந்தவர்களை விரட்டியது. இதனைக் கண்ட ஜீப் ஓட்டுநர் அந்த வாகனத்தை வேகமாக இயக்கியும், ஆத்திரம் தணியாத அந்த காண்டாமிருகம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டியது.
2 ஆயிரம் கிலோ எடை கொண்ட காண்டாமிருகம் அத்தனை வேகத்தில் வந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். நீண்ட விரட்டலுக்குப் பின் காண்டாமிருகம் திரும்பிச் சென்றது.

