ஹொரவ்பொத்தான துடுவெவ வனப்பகுதியிலிருந்து யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது..
கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய வனவிலங்கு அதிகாரிகளால் நேற்று இந்த யானையின் சடலம் மீட்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 9 அடி உயரமான இந்த யானை ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த யானையின் தந்தங்கள் இனந்தெரியதவர்களால் வெட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த யானை இயற்கையாக இறந்ததா அல்லது தந்ததிற்காக கொலை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் ஹொரவ்பொத்தான வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.