இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்த முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக வட மாகாண முதலமைச்சரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத்
அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பாக ஊடகங்களுக்கு பதில் அளிக்கையிலேயே தமது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்.
கடந்த 18.08.2018 ஆம் திகதி தலைநகர் வெள்ளவத்தையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியான அரசியல் தலைமைகள் கொண்டுவராத சில உண்மைகளை நாம் வெளிப்படையாக கூறியிருந்தோம் அதன் பிரகாரம் பல வதந்திகளும் எதிர்ப்புகளும் முகநூலின் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளது அது எமது கட்சித் தலைமைகளுக்கும் கட்சி உருப்பினர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலான சூழ்நிலையினை கொண்டுவருகின்றது. அந்தவகையிலேயே தான் நாம் இந்த ஊடக சந்திப்பின் மூலமாக இக்கருத்தினை தெரிவிக்கின்றோம்.
அதன்படி இன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்கள் சின்னத்திற்க்கு வாக்களிக்கின்ற நிலையிலிருந்து மாற்றம் பெறக்கூடிய நிலையில் காணப்படுகின்றனர் இது தொடர்பாக எமது கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா அவர்களினால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தவகையில் எமது மாற்றுக்கருத்துக்கள் கொண்ட சகோதர இன கட்சிகள் அரசியலில் சூடு பிடிப்பதற்காக மேடைகளில் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதில் பல இந்து ஆலயங்கள் உடைத்து பள்ளிவாசல்கள் கட்டப்பட்ட விடயங்கள் இரத்த ஆறுகள் ஓடும் என கூறிய விடயங்கள் பல இனங்களுக்கிடையில் ஒரு முறுகலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது அதற்காகத்தான் எமது தலைமை ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றது அதுதான் எமது மதிப்பிற்குரிய நீதியரசர் வடமாகாண சபையின் முதலமைச்சர் ஒரு மூத்த அரசியல்வாதி சீ.வி விக்னேஸ்வரன் கடந்த நாட்களில் கூறியிருக்கின்றார் முன்னாள் போராளிகள் இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை காட்டிக்கொடுப்பதாக அவ்வாறு இணைந்து செயற்படுபவர்களாயின் ஏன் தங்களுக்கு அவர்கள் மூலம் அச்சுறுத்தல் வரவில்லை இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் இந்த இடத்தில் ஒன்று மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் 30 வருட காலம் எமது மக்களுக்காகவும் நிலம் நாட்டிற்காகவும் போராடியவர்கள் இப்போராட்டமும் பல அநீதிகளுக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் எமது உரிமைகளையும் அரசியல் பலத்தையும் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் மூலமாக எம்மிடம் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கும் அனைவருக்கம் எமது சிறப்பான பதிலை நாம் வழங்குவோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

