வட மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆளுநராக அவரை நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அவர் விரும்பினால் ஆளுநராக நியமிக்க இருக்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான நேற்றைய சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வேலை செய்ய முடியாதென பெரும்பாலானவர்கள் பதவியைப் பொறுப்பேற்க விரும்புகிறார்கள் இல்லை.
எனினும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை ஆளுநராக நியமிப்பதற்கே முடிவு செய்துள்ளோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரச செய்திகள் தெரிவித்துள்ளன.
அனைத்து மாகாணங்களுக்கும் புதிய அரசாங்கத்தினால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்துக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாது காணப்படுகின்றமை அம்மாகாணத்தின் அரச நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் காணப்படுவதாக த.தே.கூ. தலைவர் ஆர்.சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

