Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வட, கிழக்கில் உணர்வபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் !

November 27, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வட, கிழக்கில் உணர்வபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் !

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்ததன் பிரகாரம் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தீவகம் சாட்டி, கோப்பாய்,, கொடிகாமம், உடுத்துறை, ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களிலும், வல்வெட்டித்துறை தீருவில் திடல், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில், கனகபுரம் விசுவமடு, முழங்காவில் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், மன்னார் மாவட்டத்தில், ஆட்காட்டிவெளி, பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம், வன்னிவிளாங்குளம், தேராவில் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களிலும், வவுனியாவில் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்திலும் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிமுன்மாரி, தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீர துயிலும் இல்லங்களிலும், தாண்டியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பகுதியிலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றதுடன் , அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடியாறு துயிலுமில்லத்திலும், திருகோணமலையில் ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மாவீரர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து தமிழர் பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

நந்திக்கடலில் மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்தார் ரவிகரன்

உயிர்நீத்த மாவீரர்களுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சிவாஜிலிங்கம் அஞ்சலி

யாழ். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர். 

கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாவீரர்களை நினைவு கூர்ந்து அன்னதான நிகழ்வு

இதேவேளை, யாழ். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் இன்றைய தினம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் இறுதி நாளில் அன்னதான நிகழ்வு இடம் பெற்றது.

உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வினை  முன்னாள் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அஞ்சலி

முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதன் போது வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் அஞ்சலி

மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார்.

அச்சுவேலி பகுதியில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) மரணமடைந்திருந்தார்.

மாவீரா் மில்லருக்கு அஞ்சலி 

மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லரின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. 

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்திருந்தனா். 

இதன்போது மாவீரா்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் தின நாளான இன்று (27) திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக அக வணக்கத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 

இதில் பெரும்பாலான உறவுகள் ஈகைச் சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தினர்.

புலனாய்வாளர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் இதனை அனுஷ்டித்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். பலர் வீடுகளிலும் மாலை 6.00 மணிக்கு விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்

வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி

வவுனியா நகரசபை மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டின் போது பொலிஸார் வருகைதந்து விபரங்களை திட்டியுள்ளனர்.

இதனையடுத்து மாவீரர்களை நினைவுகூறும் திருவுருவப்படத்தில் விடுதலைப்புலிகளை நினைவுகூறுவதாக உள்ளதென தெரிவித்து குறித்த உருவப்படத்தினையும் அங்கிருந்து எடுத்து சென்றனர்.

எனினும் குறித்த உருவப்படத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கறுப்பு நிற வர்ணம் தீட்டி மீண்டும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார்.

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு- தரவை மற்றும் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பு- தரவை

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு அஞ்சலி

அம்பாறை கஞ்சிக்குடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டு மாவீரர் நாள் நினைவேந்தல்களை மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர்.

மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிசார் மற்றும், இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.

சரியாக மாலை 06.05மணிக்கு மாவீரர் நினைவொலி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன், ஏனைய சுடர்களும் மாவீரர்களின் உறவுகளால் ஏற்றப்பட்டு மலர்தூவி, கண்ணீர்சிந்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

அந்தவகையில் பிரதான சுடரினை மூன்று மாவீரர்களது சகோதரியான உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் வேணன் அக்கினேஸ் என்பவர் ஏற்றினார்.

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மீள் குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து மாவீரர் துயிலுமில்ல வளாகத்திற்கு முன்பாக வீதியோரமாகவே உறவுகளால் மாவீரர்களுக்கு அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந் நிலையில் இராணுவத்தினரின் பலத்த கண்காணிப்பிற்கு மத்தியில் ஒருவித அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே உறவுகளால் அஞ்சலி செலுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

மேலும் இந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாவீரர்களது உறவுகள், பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன் இடம்பெற்ற மாவீரர் நாள் அஞ்சலி

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் – எள்ளாங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

பிரதான ஈகை சுடரினை மேஜா் சோதியாவின் (சோதியா படையணி)  தாயாா் ஏற்றிவைத்தாா். 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் , சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

யாழ். – கோப்பாயில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

யாழ். சாட்டி துயிலும் இல்லத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரில் மாவீரர் தின நினைவேந்தல் முன்னெடுப்பு

மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு மாவீரர்  நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டுள்ளது.  

தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூரப்பட்டு வருகிறது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி  மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு .இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஆட்காட்டி வெளி  மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் தற்போது ஒன்று திரண்டு   உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள்,  உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு தாயக விடுதலைக்காக உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Previous Post

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !

Next Post

2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை இலங்கை சந்திக்க நேரிடும்!

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

2023 ஜூலைக்குள் வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை இலங்கை சந்திக்க நேரிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures