Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20  கிரிக்கெட்

March 24, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, யாழ். சென். பட்றிக்ஸ் மோதும் 6ஆவது வருடாந்த ரி20  கிரிக்கெட்

யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி நாளை 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நாளை புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். 

இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் கடந்த வருடம் வரை நடைபெற்று முடிந்த 5 போட்டிகளில் 4இல் சென். பெட்றிக்ஸ் வெற்றிபெற்றுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்லூரி ஒரு வெற்றியை ஈட்டியுள்ளது.

இந்த வருடம் இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெற்ற 109ஆவது பொன் அணிகளின் சமர் எனப்படும் மாபெரும் 3 நாள் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

அதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் கடந்த  சனிக்கிழமை (21) நடைபெற்ற ராஜன் கதிர்காமர் கிண்ணத்துக்கான 33ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் கல்லூரி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

மூன்று நாள் கிரிக்கெட் போட்டியிலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்த வருடம் திறமையை வெளிப்படுத்திய யாழ்ப்பாணம் கல்லூரி, ரி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2ஆவது வெற்றியை ஈட்ட முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை தனது வெற்றி எண்ணிக்கையை 5ஆக உயர்த்தும் குறிக்கோளுடன் சென். பெட்றிக்ஸ் களம் இறங்கவுள்ளது.

இப் போட்டியைக் கண்டுகளிக்க இரண்டு கல்லூரிகளினதும் சமகால மாணவர்கள், பழைய மாணவர்கள், ரசிகர்கள் பெருமளவில் மைதானத்தில் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

சென். பட்றிக்ஸ்: பிரேமநாயகம் மதுசன் (தலைவர்), சிவநாதன் ஷெகான் (உப தலைவர்), ரொபின்சன் பியர்லி டெனோவன், காம்டின் லிக்ஷன், விமலதாஸ் டெஃபானோ, செரெனஸ் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன், மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா, ஜெபின்சன் கெமிஷன், டைட்டஸ் ஜோயேஷ், செல்வகுமார் ஸ்மித் செனாரி, ஜெயராஜரூபன் டினுலக்சன், ஜீவராஜ் மேகவர்ஷிகன், மெரின் ஹில்மன் தனுஷன், ரொக்ஷான் வொட்சன் செர்வின், அருள்ராஜன் அஷோபின், பிரதீப் மெலோடியஸ் ரவின், சுரேஷ்குமார் ஜானுசன், தேவராசா சஜீன் ஜோபேர்ட், ரொபின்சன் தேவ்சன், ஹென்றிக் விகாயகுமார் கியூட்வெஸ்லன்.

யாழ்ப்பாணம் கல்லூரி: ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (தலைவர்), வாசுதேவன் விஷ்னுகோபால் (உப தலைவர்), திவாகரன் கார்த்திகன், சசிகரன் சங்கீத், அன்ரனி ரித்மன் அபிநாத், ஸ்டெலன் கருணைதாஸ் ஹமிஷ் ஹாமிஷன், கீதேஸ்வரன் ஹரிஷன், அனுஷாந்தன் ஹாமிஷன், சுரேஷ் கபிஷன், சுபீசன் தக்சிகன், கேதீஸ்வரன் திருக்குமரன், உதயராஜா கென்றிக்சன், பாலரூபன் கெவின், சசிகரன் அஷ்மின், சத்திவேல் சதுஜன், ரவிகுமார் சாருஜன், சசிகாந்த் கிரிஷான், ராசஜெயந்தன் அஷ்வின், தயாபரன் அக்சயன்.

Previous Post

தங்க விலையில் அதிரடி மாற்றம் : இன்றைய விலை நிலவரம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures