ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் இன்று அதிகாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பன்னாகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனைப் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்