மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் நேற்று காலை பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருபதாவது – இரு வேறு இடங்களில் வட்டிக் கடனாக பெற்ற வட்டி பணத்தை செலுத்த முடியாமல் கணவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு ஆறு வயதுடைய மகளும், 15 மாத வயதுடைய ஆண் பிள்ளையும் உள்ளனர்.
பிள்ளைகளை வைத்து தனியாக இருக்க முடியாது என்ற நிலையில் தனது சகோதரியின் வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த பெண் தனது சகோதரியின் வீட்டு ஜன்னல் கம்பியில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டுதொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து கரடியனாறு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.