வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நேற்றுக் கோரினார் வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கோரினார்.
“வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகோதர இனமான முஸ்லிம் மாணவிகளின் நீளக் காற்சட்டை போன்ற ஆடையை எமது மாணவிகளும் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
“மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறே ஆடைகள் தைக்கின்றனர். பாடசாலை மாணவிகள் ஒழுக்கமான முறையிலேயே உடை அணிகின்றனர். இது தொடர்பில் ஆராயலாம்.”- என்று பதிலளித்தார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.