உயர் அழுத்த, தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வடமாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு, சோளாவத்தை, மண்கும்பான் தேசிய நீர்வழங்கல் வடிகால்சபை, மண்கும்பான் கடற்படை முகாம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் அக்கராயன் குளம், கோவில்குடியிருப்பு, அமைதிபுரம், முறிகண்டி கொமாண்டோ இராணுவ முகாம், அம்பலப்பெருமாள், கோட்டைகட்டி, ஆனை விழுந்தான், வன்னேரிக்குளம், சோலை, ஜெயபுரம், நாகபடுவான், பல்லவராயன் கட்டு, வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில், முழங்காவில், நாச்சிக்குடா, வெள்ளாங்குளம் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில் தெற்கிலுப்பைக்குளம் பிரதேசம், வவுனியா நகரம் (மன்னார் வீதி), நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் வரை, நெளுக்குளத்திலிருந்து பறயனாலங்குளம், பூவரசங்குளத்திலிருந்து செட்டிகுளம்வரை, புளிதறித்த புளியங்குளத்திலிருந்து செக்கட்டிப்புலவு, பிரமனாலங்குளத்திலிருந்து பெரியதம்பனை வரை, வேளாங்குளம், மடுக்குளம், வேளாங்குளம் விமானப்படை, ஒமேகாலைன், யு.என்.எச்.சி.ஆர். குருமண்காடு, வவுனியா தொழில் நுட்பக்கல்லூரி, பம்பைமடு பல்கலைக்கழகம், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, சுயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, செட்டிகுளம் வைத்தியசாலை, செட்டிகுளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்-டிகுளம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இடங்களிலும் மன்னார் பிர-தேசத்தில் பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து மடு வரை, ஈச்சலவாக்கையிலிருந்து பள்ளமடு வரை, விடத்தற்தீவிலிருந்து வெள்-ளாங்குளம் வரை, வெள்ளாங்குளம் நீர்ப்பா-சனத் திணைக்களம், விடத்தல்தீவு வைத்தி-யசாலை, கணேசபுரம் இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்-ப-டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.