வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கான அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள், முன்னேற்றங்களை காண்பிக்காவிட்டால், அவற்றை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
குறித்த பாடசாலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு ஏற்படும் செலவுகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின்படி மூடப்படும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், அருகிலுள்ள பாடசாலைகளுடன் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.