Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்

January 29, 2019
in News, Politics, World
0

வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிர்ணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும்போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவ்வறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பென் எமர்ஷன் சமர்ப்பித்துள்ளார்.  அதில் அவர் கூறியுள்ளதாவது,

“இலங்கையில் விரைவாக பயங்கரவாதம் நீக்கப்பட்டு அதற்கு எதிராக உருவாக்கப்படுகின்ற புதிய சட்டம் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டவையாக காணப்பட வேண்டும்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு அவர்களின் தண்டனைகள் குறித்த பொறிமுறையொன்று அவசியம்.

அதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அந்தவகையில் வடக்கிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

ஆகையால் பாதுகாப்பு துறை முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியது அவசியம்”  என பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் – கோட்டபய ராஜபக்ச

Next Post

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவு

Next Post

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures