Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு மக்களுக்கு தீர்வைப்பெற்றுத்தர தவறிய விக்கினேஸ்வரன்

March 20, 2019
in News, Politics, World
0

வடக்கு மக்களுக்கு தீர்வைப்பெற்றுத்தர தவறிய மாஜி முதல்வர் .கிழக்கு மாகாண மக்களை சிதைக்க எத்தனிப்பதை நிறுத்த வேண்டும். என முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் அவர்கள் கருத்துதெரிவித்தார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சீ.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து மக்களை சந்தித்து சில விடயங்களை கூறிவருவதாக அறிகின்றோம்.

வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும்பொழுது தங்களது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அறியாதவர். வடக்கிலுள்ள பிரச்சினைகளை தீர்த்திருக்க வேண்டியவர். இவையனைத்தையும் தவறவிட்ட தலைவரே சீ.வி.விக்கினேஸ்வரன் .

வடமாகாணசபைக்கு முதலமைச்சராக இருந்தவேளையில் கிழக்கு மாகாணம் பற்றி கருத்துக்கூறியபோதெல்லாம் நான் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கிழக்கு மாகாணம் பற்றி பேச முடியாது, செயற்படமுடியாது என அதிகாரத்தில் இருக்கும்போது பேசியவரே முன்னைநாள் வடக்கு மாகாண முதல்வர் அவர்கள்.

அதிகாரங்களையெல்லாம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாத தலைவர் இப்போது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை சின்னாபின்னமாக்கி சிதறடிக்க எத்தனிப்பது நகைப்பிற்குரியது. இனரீதியான பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து கொண்டு வாழுகின்ற சூழலில் கிழக்கிலே இருக்கின்ற தமிழர்களை சிதைப்பதற்கு எந்தவொரு கொள்கையுமில்லாமல் நேரத்திற்கொரு கருத்தும், நாளுக்கொரு கருத்தும் சொல்லும் முன்னாள் வடக்கு முதல்வர் எங்களை கூறுபோட முற்படுவது கிழக்கை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவே பார்க்கின்றோம்.

இப்பொழுது எங்களது தமிழர்களை பொறுத்தவரை எங்களது பிரச்சினைகள் நீண்டகாலமாக இழுத்தடிப்பு நிலையான தீர்வுகிடைக்கவில்லை. ஆனால் இவற்றுக்கான முன்னெடுப்புகள்முன்னெடுத்தாலும் தாமதங்கள் ஏற்படுகின்ற சூழலில் எம்மையும் மக்களையும் குழப்பி கூறுபோடுகின்ற செயலை அவர் மாத்திரமல்ல அவரோடு சேர்ந்து செயற்படுகின்ற ஊடுருவிகளும் செயற்படுவது மனவேதனையான விடையம்.

இன்று வடகிழக்கு இணைப்பு என்பது தமிழர்களது இதயத்துடிப்பாக இருந்தாலும் இன்று வடக்கு வேறு கிழக்கு வேறு என்ற அடிப்படையில் நிருவாக ரீதியான செயற்பாடுகள் இருந்தாலும் கிழக்குமாகாணம் எனும்போது நாங்கள் தீர்க்கதரிசனமாக செயற்படவேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

அந்த அடிப்படையில் வடக்கு முன்னாள் முதல்வர் ஒருசிலரோடு சேர்ந்து குழப்ப முற்படுவது வேதனையழிக்கிறது. முதல்வராக இருக்கும்போது அதிகாரங்களை பயன்படுத்தி சாதிக்கவேண்டியவராக இருந்தார். ஆனால் அவரது முக்கியமான குறிக்கோளாக இருந்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைப்பதைத்தான் கையிலெடுத்துக்கொண்டு செயற்பட்டதை கடந்தகாலத்திலும்சரி தற்காலத்திலும்கூட அறிந்துகொண்டு இருக்கின்றோம்.

வடக்குமாகாண முன்னாள் முதல்வரோடு இணைந்து பல கட்சி தாவியவர்களும்,பல துரோகங்களையும் இனத்திற்கு செய்தவர்களும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்.

நான் தவிசாளராகவும், மாகாண சபை உறுப்பினராகவும் இருந்து தளங்களில் நின்று செயற்பட்டிருக்கின்றேன். மக்கள் தங்களது ஆணையை கட்சிக்கும்,எங்களுக்கும் வழங்கி பதவிகளில் வைத்திருப்பது மக்களுக்கு சேவைகளை புரிவதற்கே. எங்களது இயலாமையை வைத்துக்கொண்டு கட்சியை குறை கூறுவது வேடிக்கையான விடையம்.

எங்களது அரசியல் பயணத்தில் கட்சி தடையா இருந்ததில்லை ஆனால் வடக்கு முதல்வரோ தமிழ்தேசிய கூட்டமைப்பையும்,எங்களது தமிழ் மக்களையும் பிரித்தாளும் செயற்பாடுகளை செய்துகொண்டிருக்கின்றார். முதலமைச்சர் பதவிக்காலத்தில் திறம்பட செயற்பட்டிருந்தால் சிறப்பான தலைவராகவும் இருந்திருப்பார் அதை எமது கட்சி தலைமையும் ஏற்றுக்கொண்டிருக்கும் என தெரிவித்தார்.

Previous Post

ஜெனீவாவில் இருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன் !!

Next Post

இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளிடம் சுமந்திரன் கோரிக்கை

Next Post

இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளிடம் சுமந்திரன் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures