Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களுக்கு படையணி

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

வடக்கு , கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை வினைத்­தி­றன் மிக்­க­தாக முன்­னெடுப் பதற்கு இரண்டு சிறப்பு படை­ய­ணி­கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன என்று ஜனாதிபதி கூறி­யுள்­ளார்.

நேற்று மட்­டக்­க­ளப்­புக்­குச் சென்ற ஜனாதிபதி பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கும் நிகழ்­வில் கலந்து கொண் டார். அதில் உரை­யாற்­றி­ய­போதே இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

அபிவிருத்தியை முன்­னெ­டுப்ப­தற்கு அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ள­தும், மக்­கள் பிர­தி­நி­தி­க­ள­ தும் உத­வியைத்தான் எதிர்பார்க்கின்றார் என்றும் அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டு இதே தினம் (4ஆம் திகதி மார்ச் மாதம் 2017ஆம்ஆண்டு) வடக்கு மாகா­ணத்­தில் “ஜனாதிபதியி­டம் தெரி­வி­யுங்­கள்” அலு­வ­ல­கத் திறப்பு விழா யாழ்ப்­பா­ணத்­தில், வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­தில் நடை­பெற்­றது.

அதில் கலந்­து­கொண்டஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யாற்­றி­னார்.“யாழ்ப்­பா­ணத்­தில் புதிய அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை செயற்­ப­டுத்­தி­னால்­தான் நன்­றாக இருக்­கும். எதிர்­வ­ரும் 3 மாதங்­க­ளில் ஒவ்­வொரு மாத­மும் நான் இங்கே வரு­வென். பெரிய கூட்­டம் போடு­வ­தற்கு வர­வில்லை. இங்­குள்ள மக்­கள் பிர­தி­நி­தி­கள், அரச அதி­கா­ரி­கள், அர­சின் அமைச்­சர்­கள் என அனை­வ­ரை­யும் அழைத்து அபி­வி­ருத்தி தொடர்­பில் இங்­குள்ள பிரச்­சி­னை­களை எவ்­வாறு விரைந்து தீர்ப்­பது என்­பது தொடர்­பில் பேசவே நான் ஒவ்­வொரு மாத­மும் வர­வுள்­ளேன். பல பிரச்­சி­னை­களை அதன்­மூ­லம் தீர்க்­க­லாம் என்று நம்­பு­கின்­றேன்.”- என்று கூறிச் சென்­றார்.

ஓராண்­டா­கி­யும் அப்­படி ஏதும் நடக்­க­வில்லை. குழு­வும் அமைக்­கப்­ப­ட­வில்லை. ஜனாதிபதி மாதத்­துக்­கொரு முறை வர­வில்லை. நேற்று மட்­டக்­க­ளப்­பில் இரு சிறப்பு ஜனாதிபதி படை­­கள் உரு­வாக்­கப்­ப­டும் என்று ஜனாதிபதி குறிப்­பிட்­டுள்­ளார்.

“நீண்­ட­கா­ல­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் இடம்­பெற்று வந்த போரின் கார­ண­மாக பின்­ன­டைந்­தி­ருந்த அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை வினைத்­தி­றன்­மிக்க வகை­யில் முன்­னெ­டுப்­ப­தற்கு இரண்டு சிறப்பு ஜனாதிபதி படை­ய­ணி­களை உரு­வாக்­கு­வ­தற்கு நான் நட­வ­டிக்கை எடுக்­கின்­றேன். அதற்கு அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளை­யும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் உத­வியை எதிர்­பார்க்­கின்­றேன்.”- என்று அவர் கூறி­னார்.

Previous Post

அம்­பாறை தாக்குதல் :பாராமுகமாய் இருத்த பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் !

Next Post

நெல்­லி­யடி மாலு சந்­தி­யில் இளை­ஞன் சடலமாக மீட்பு

Next Post

நெல்­லி­யடி மாலு சந்­தி­யில் இளை­ஞன் சடலமாக மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures