Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது – சுமந்திரன்

October 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கிலே ஆஜராகிய பின் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த விடயம் தெர்டரபாக கருத்து தெரிவிக்கும் போது

தொல் பொருள் திணைக்களம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கின்ற செயல் அரங்கேற்றி வருகின்றது.

 அதன் ஒரு பிரதிபலிப்புத் தான் திருகோணமலை மாவட்டம் திரியாய் மற்றும் தென்னமரவாடி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்வதற்கு தடுத்த ஒரு சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. 

அந்த வேளையில் நிலத்திற்கு உரித்தான் விவசாயிகள் மேல் நீதி மன்றத்திலே வழக்கு தாக்கல் செய்து ஒரு இடைக்கால தடை உத்தரவினைப் பெற்றிருந்தார்கள் அந்த வழக்கை ஆதரித்து வாதாடியவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் இடைக்கால உத்தரவை மேல் நீதி மன்றம் வழங்கி தொல் பொருள் திணைக்களம் விவாயிகளுக்கு இடையூறு கொடுக்க கூடாது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய உரித்துடையவர்கள் என கட்டளை பிறப்பித்திருந்தது.

அந்த வருடம் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் செய்கையை மேற் கொண்டு அறுவடை செய்யக் கூடியதாக இருந்தது.

ஆனால் அதற்கு பிறகு தொடர்ச்சியாக விவசாயிகள் தடுக்கபட்டனர். வேறு பல அச்ருத்தல்களுக்கும் விவசாயம் செய்வதற்கான தடுப்புக்களும் மேற் கொள்ளப்பட்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை இவ்வருடமும் மேற் கொள்ள முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த பின்னனியிலே இறுதி விவாதத்திற்கு இன்று 30ம் திகதி மேல் நீதி மன்றத்திலே இந்த வழக்கு எடுக்கப்பட்டது. சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் நானும் இந்த வழக்கிலே ஆஜராகி வாதாடி இருக்கின்றோம். மிக முக்கியமாக மாகாண மேல் நீதி மன்றுக்கு நிலம் சம்மந்தமான எழுத்தாணைகளை வழங்குகின்ற அதிகாரம் இல்லை என்ற வாதத்தை அரச தரப்பு முன் வைத்திருந்தது.

அரசியலமைப்பின் படி ஒன்பதாவது நிரலின் கீழ் காணி அதிகாரம் மாகாணத்திற்கென்  வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண நீதி மன்றம் எழுத்தாணை  வழங்குகின்ற போது எந்த ஒரு நபருக்கு எதிராகவும் மாகாண நிரலில் உள்ள விடயம் சம்மந்தமாக எழுத்தாணை வழங்க முடியும் என்று சொல்லபட்டிரக்கின்றது. அரசியல் அமைப்பில் உள்ள குறித்த விடயத்தை மன்றுக்கு நாம் சுற்றிக் காட்டியுள்ளோம்.

100 வருடங்களுக்கு முற்பட்ட காணி உறுதிகளை குறித்த காணி உரிமையாளர்கள் வசம் உள்ளது. அவற்றை நாம் வழக்கிலே காட்சிப் படுத்தி இருக்கின்றோம்.

ஆகையால் இது அரச காணி அல்ல தனியார் காணி இந்த காணியிலே தங்களுடைய விவசாயத்தை செய்வதற்கு அவர்களுக்கு உரித்துண்டு அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிதில்லை என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கினுடைய இறுதித் தீர்ப்பு எதிர்வரும் மார்கழி 02ம் திகதி என திகதியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் மாதத்திலே இரு தரப்பினரும் எங்களுடைய வாதங்களுக்கு சார்பான எழுத்து மூல சமர்ப்பணங்களை செய்யலாம் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்பாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Previous Post

எரிபொருள் விலையில் மாற்றம்

Next Post

உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியா வசமானது | புதின் அறிவிப்பு

Next Post
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மெழுகுச் சிலை அகற்றம்

உக்ரைனின் 4 பகுதிகள் ரஷியா வசமானது | புதின் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures