வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான விசேட செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தில் கூடியுள்ளது.
இரு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டடத்தில் இந்த விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் வீட்டுத் திட்ட நிர்மாணம் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்டவர்களை பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.