Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கு – கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா

May 26, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் ;சவேந்திர சில்வா

வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற இறுதிப் போர் உண்மையில் போர் அல்ல, விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்களையும் இடங்களையும் மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடன் இறுதியாக நடத்திய சண்டை போர் அல்ல. அது மனிதாபிமான நடவடிக்கையாகும்.

அது மனிதாபிமான நடவடிக்கையாக இல்லாமல் இருந்திருந்தால் சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களைப் படையினர் கொன்றிருப்பார்கள்.

சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை

காயமடைந்த விடுதலைப் புலிகளுக்குக் கூட வைத்தியம் செய்தோம். அவர்களுக்கு உணவளித்தோம்.

வடக்கு - கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா | There Was No War In The North East Shavendra Silva

விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை இடங்களை மீட்டு முழு நாட்டுக்கும் மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையே அது.

விடுதலைப் புலிகள் தலதா மாளிகையைத் தாக்கினார்கள். காத்தான்குடி பள்ளிவாசலைத் தாக்கினார்கள். சிறிமாபோதியைத் தாக்கினார்கள்.

அரந்தலாவை பிக்குகளை கொலை செய்தார்கள். ஆனால், எமது மனிதாபிமான நடவடிக்கையின் போது எந்தவொரு வணக்கஸ்தலங்களையும் அழிக்கவில்லை” என தெரிவித்தார்.

Previous Post

மையல் – திரைப்பட விமர்சனம்

Next Post

கனடாவில் ஈழத்தமிழரின் முன்மாதிரியான செயற்பாடு: நன்கொடையாக வழங்கிய பெருந்தொகை

Next Post
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் ஈழத்தமிழரின் முன்மாதிரியான செயற்பாடு: நன்கொடையாக வழங்கிய பெருந்தொகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures