Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ள கோட்டாபய

February 21, 2019
in News, Politics, World
0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை இவ்விரு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இதன்படி அடுத்த மாதத்துக்குள் மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தொகுதி மட்டத்திலான செயற்பாட்டாளர்களுக்கான நியமனமும் வழங்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் மேற்படி சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவே களமிறக்கப்படவேண்டும் என பங்காளிக்கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பாட்டு அரசியலில் இறங்கியுள்ளார். இந்நிலையிலேயே, வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் கோட்டா குறிவைத்து தற்போது காய் நகர்த்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்

Next Post

வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை

Next Post

வடக்கில், அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures