வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக சி.சத்தியசீலனும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கே.தெய்வேந்திரமும் நேற்று வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாண செயலாளர்கள் நால்வரை இடமாற்றம் செய்யுமாறு கடந்த இரு மாதங்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த ஆளுநர் இந்த இடமாற்றங்களை மேற்கொண்டார்.
இதுவரை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த சி.சத்தியசீலன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண பேரவைச் செயலக செயலாளராகக் கடமையாற்றிய கே.தெய்வேந்திரம் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக சி.சத்தியசீலனையும், ஆளணியும், பயிற்சி நெறியின் செயலாளராகக் கடமையாற்றும் சிவபாதசுந்தரத்தை விவசாய அமைச்சின் செயலாளராகவும் நியமிக்க வேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் கோரியிருந்தார்.
இந்தப் பரிந்துரையில் செயலாள்களின் சேவை மூப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவற்றையும் ஆராய்ந்த ஆளுநர் தற்போது செயலாளர்களை நியமித்துள்ளார்.