Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு அமைச்­சரவையில் -மற்­றொரு குழப்­பம்!!

August 6, 2018
in News, Politics
0

வடக்கு அமைச்­சர் சபை­யில் புதிய குழப்­பம் தோன்­றி­யுள்­ளது. அமைச்­சர்­க­ளுக்­கான சம்­ப­ளம் மற்­றும் கொடுப்­ப­ன­வு­கள், அவர்­க­ளது பணி­யாள் தொகு­திக்­கான சம்­ப­ளம் என்­ப­வற்றை வழங்­க­லாமா எனக் கேட்டு, அமைச்­சுக்­க­ளின் செய­லர்­கள் வடக்கு மாகாண ஆளு­நர் குரேக்கு கடி­தம் அனுப்­பி­யுள்ளனர்.

வடக்கு மாகாண அமைச்­சர் சபை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக பா.டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். ஜூன் மாதம் 29ஆம் திகதி இடைக்­கால கட்­ட­ளையை வழங்­கிய மன்று, பா.டெனீஸ்­வ­ரன் அமைச்­ச­ரா­கத் தொடர்­கின்­றார் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

டெனீஸ்­வ­ரன் அமைச்­ச­ரா­கத் தொடர்­வ­தால் அமைச்­சர் சபை­யில் 6 பேர் உள்­ள­னர். அர­ச­மைப்­புக்கு அமை­வாக 5பேர் மாத்­தி­ரமே அமைச்­சர்­க­ளா­கப் பத­வி­வ­கிக்க முடி­யும். டெனீஸ்­வ­ர­னை­யும், வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னை­யும் உள்­ள­டக்­கிய அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பை மேற்­கொள்­ளு­மாறு மன்று பணித்­தது.வடக்கு மாகாண ஆளு­நர், வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம், அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்­புக்கு அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைப் பரிந்­து­ரைக்­கு­மாறு கோரி­யி­ருந்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் இது­வ­ரை­யில் பெயர்­க­ளைப் பரிந்­து­ரைக்­க­வில்லை. தனக்கு அதற்­கான அதி­கா­ரம் இல்லை என்று நீதி­மன்று கட்­ட­ளை­யிட்­டுள்­ளது. ஆளு­நர் விட்ட தவறை அவரே சரி­ய­வேண்­டும். இவ்­வாறு தெரி­வித்து வடக்கு முத­ல­மைச்­சர், அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைப் பரிந்­து­ரைக்­க­வில்லை.

அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு இடம்­பெ­றாத நிலை­யில், அமைச்­சர் சபை­யின் கூட்­டம் இரண்டு மாதங்­க­ளா­கக் கூட்­டப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண சபை­யின் சட்­ட­வாக்க, நிறை­வேற்­றுச் செயற்­பா­டு­கள் தேக்­க­ம­டைந்­துள்­ளன.

அமைச்­சர் சபை மறு­சீ­ர­மைக்­கப்­ப­டாத நிலை­யில், தற்­போது அமைச்­சர்­க­ளாக உள்­ள­வர்­க­ளுக்­கு­ரிய சம்­ப­ளம் மற்­றும் கொடுப்­ப­ன­வு­களை வழங்க முடி­யுமா என்று அமைச்­சுக்­க­ளின் செய­லர்­கள் வடக்கு ஆளு­ந­ரி­டம் கோரி­யுள்ளனர்.

ஆளு­நர், சட்­ட­ஏற்­பா­டு­களை மாத்­தி­ரம் குறிப்­பிட்டு அமைச்­சுச் செய­லர்­க­ளுக்­குப் பதில் வழங்­கி­யுள்­ளார். சம்­ப­ளத்தை வழங்க முடி­யுமா? இல்­லையா என்­ப­தற்கு அந்­தக் கடி­தத்­தில் நேர­டி­யா­கப் பதில் தெரி­விக்­க­வில்லை. இது அமைச்­சுச் செய­லர்­க­ளி­டம் மேலும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

Previous Post

சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­ பொலிஸார்

Next Post

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

Next Post

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures