Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் நாளை முழுவதும் ஊரடங்கு – 6 மணிக்கு தளர்த்தப்பட்டு 2 மணிக்கு மீண்டும் அமுல்

March 22, 2020
in News, Politics, World
0

வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும், அதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதுடன், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

வடக்கில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து ஏனையோரை அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இம்மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும்  ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous Post

கேப்பாபுலவு மையத்துக்கு 5 பேரூந்துகளில் அழைத்துவரப்பட்ட மக்கள் !

Next Post

இயக்குநரும் நடிகருமான விசு காலமானார்

Next Post

இயக்குநரும் நடிகருமான விசு காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures