வடக்கு மாகாணத்தில் (Northern Province) நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான வர்த்தமானி
வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.