Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கா ? தெற்கா ? சம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று !

March 5, 2022
in News, Sri Lanka News
0
வடக்கா ? தெற்கா ? சம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று !

அங்குரார்ப்பண மாகாணங்கள் லீக் சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனைத் தீர்மானிக்கும் வட மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை 05 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடியபோது தென் மாகாண அணியை 3 – 1 என்ற கோல்கள் கணக்கல் மிக இலகுவாக வட மாகாணம் வெற்றிகொண்டிருந்ததாலும் இப் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாலும் வட மாகாணத்துக்கு அனுகூலமான முடிவுகிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தென் மாகாண அணியை இலகுவாகக் மதிப்பிடப்போவதில்லை என வட மாகாண அணி பயிற்றுநர் ஜஸ்மின் ரட்ணம் தெரிவித்தார்.

‘எமது சொந்த மண்ணில் இறுதிப் போட்டி நடைபெறுவதாலும் வடக்கின் பெருந்திரளான இரசிகர்கள் தமது அணி வெற்றிபெறவேண்டும் என எதிர்பார்ப்பதாலும் எமக்கு சிறு அழுத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால்,போட்டியில் வெற்றிபெற்று வட மாகாணத்துக்கு புகழீட்டிக்கொடுக்க முயற்சிப்போம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ‘வட மாகாண அணியை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொள்வது சிரமம் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால், லீக் சுற்றில் அவர்களிடம் அடைந்த தோல்வியை நிவர்த்திசெய்யும் வகையில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற கடுமையாக போட்டியிடுவோம்’ என தென் மாகாண அணி பயிற்றுநர் ஷிரன்த குமார தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளினதும் பெறுபேறுகளை ஒப்பிடும்போது தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான வட மாகாண அணியின் பெபேறுகள் தென் மாகாணத்தை விட சிறப்பாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

எனினும் இறுதிப் போட்டியில் எந்த அணி தவறு இழைக்காமல் மிகத் திறமையாகவும் நேர்த்தியாகவும் விளையாடுகின்றதோ அந்த அணி வெற்றிபெறுவது உறுதி.

வட மாகாண அணி லீக் சுற்றில் சப்ரகமுவ (0-0), ஊவா (2-0), தெற்கு (3-1), மத்திய (1-0), கிழக்கு (0-0), ரஜரட்ட (2-2), மேற்கு (1-1), கிழக்கு 1ஆம் கட்டம் அரை இறுதி (1-0), 2ஆம் கட்ட அரை இறுதி (0-0) – அரை இறுதிகளில் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 1-0 என்ற பெறுபெறுகளைக் கொண்டிருந்தது.

தென் மாகாண அணி லீக் சுற்றில் மேற்கு (1-1), சப்ரகமுவ (0-1), வடக்கு (1-3), ரஜரட்ட (2-1) மத்திய (1-0), ஊவா (3-1), கிழக்கு (0-0), சப்ரசமுவ 1ஆம் கட்ட அரை இறுதி (0-1), 2ஆம் கட்ட அரை இறுதி (2-1) -அரை இறுதிகளில் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 2-2. பெனல்டி முறையில் 4-1 என்ற பெறுபேறுகளைக் கொண்டிருந்தது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் பதவிக்கு வந்த மிகக் குறுகிய காலத்தில் எடுத்துக்கொண்ட அயரா முயற்சியின் பலனாக இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக மாகாணங்களுக்கு இடையிலான லீக் கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுகின்றது.

இப் போட்டியை பிற மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்திய பெருமையும் ஜஸ்வர் உமரை சாருகின்றது.

குருநாகல், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, கண்டி, காலி, நாவலப்பிட்டி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய நகரங்களில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, கடந்த கடந்த நான்கு மாதங்களில் இலங்கையில் நடத்தப்பட்ட பிரதான விளையாட்டுப் போட்டிகளில் (கிரிக்கெட்) வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தியே அணிகயே சம்பியனாகின.

எல்பிஎல் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ், தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் அணியும் சம்பியனாகி இருந்தன.

எனவே சுதந்திர கிண்ணமும் வட மாகாணத்துக்கு சொந்தமாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அணிகள்

வட மாகாணம்:

  • மரியதாஸ் நிதர்சன் (தலைவர்)
  • செபமாலைநாயகம் ஜூட் சுபன்
  • ஜே. அமல்ராஜ்
  • எஸ். ஜெயராஜ்
  • ரி. கிளின்டன்
  • வி. கஜநாதன்
  • என். தயான்ஷன்
  • எம். பிரசாந்த்
  • ஏ. செபஸ்தி அருள்
  • வீ. கீதன்
  • வி. விக்னேஷ்
  • ஏ. டிலக்சன்
  • ஏ. அனக்கிளிட்டஸ்
  • சச்சின் லெம்பர்ட்
  • ஆர். சாந்தன்
  • எஸ். ஜேசுதாசன்
  • பி. புவிதரன்
  •  ஜே. ஜெனின்சன்
  • எவ். அனோஜன்
  • எஸ். அஜய் ரீகன்
  • கே. தேனுஷன்
  • ஜே. ஜெபநேசன் ரோச்
  • ஏ. ஜே. ஜெரோம்

தென் மாகாணம்: 

  • எம்.ஆர். ரிஷாத் (தலைவர்)
  • ஏ. சத்துரங்க
  • சுப்புன் தனஞ்சய
  • ரி. தனுஷ்க
  • என். ராஜபக்ஷ
  • எல். தனஞ்சய
  • ஏ. கவிந்து
  • ருமேஷ் மெண்டிஸ்
  • எம். ரிஸ்லான்
  • என். விஹங்க
  • கெஷான் துமிந்து
  •  எம். லுப்தி
  • கே. சத்சர
  • எம். பசெச்
  • சி. முடிதுபிட்டிய
  • டி. பிரபாத்
  • எம். நாதன்
  • எஸ். சச்சித்
  • பி. வீரப்புலி
  • கே. பீமல்
  • எம். பர்ஹான்
  • எமில்க நிமால், எஸ். மத்ய
Previous Post

பசில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Next Post

உக்ரைனில் 10 ஆவது நாளாக தொடரும் ரஷ்யாவின் மும்முனைத் தாக்குதல்கள்

Next Post
உக்ரைனில் 10 ஆவது நாளாக தொடரும் ரஷ்யாவின் மும்முனைத் தாக்குதல்கள்

உக்ரைனில் 10 ஆவது நாளாக தொடரும் ரஷ்யாவின் மும்முனைத் தாக்குதல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures