வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 726 பேரைத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 747 பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்களைத் தெரிவு செய்வதற்காக வடக்கில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு நேற்று வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணியிலிருந்து பி.ப. 4 மணி வரையில், வடக்கில் 997 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் வாக்கு எண்ணும் பணி 531 இடங்களில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணத்தில் 521 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 239 இடங்களில் வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ளது. 402 பேரைத் தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 376 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 243 பேர் வட்டார ரீதியாகவும் ஏனையோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இவர்களைத் தேர்ந்தெடுக்க 4 லட்சத்து 68 ஆயிரத்து 482 பேர் வாக்களிக்கவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 117 இடங்களில் வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ளது. 66 பேரைத் தெரிவு செய்வதற்காக 638 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இவர்களில் 40 பேர் வட்டார ரீதியாகவும் ஏனையோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 86 ஆயிரத்து 731 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 134 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 70 இடங்களில் வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ளது. 67 பேரைத் தெரிவு செய்வதற்காக 757 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 41 பேர் வட்டார ரீதியாகவும் ஏனையோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 72 ஆயிரத்து 961 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 94 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 47 இடங்களில் வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ளது. 88 பேரைத் தெரிவு செய்வதற்காக 904 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 52 பேர் வட்டார ரீதியாகவும் ஏனையோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 86 ஆயிரத்து 94 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 148 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 58 இடங்களில் வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ளது. 103 பேரைத் தெரிவு செய்வதற்காக ஆயிரத்து 72 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 52 பேர் வட்டார ரீதியாகவும் ஏனையோர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்கவுள்ளனர்.