வடகொரியாவுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை நடந்தாலும், அப்பேச்சுவார்த்தை அணுவாயுதப் பரவலை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருக்குமென, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவில் இம்மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த குளிர்கால ஒலிம்பிக்போட்டி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைந்தது. இதன்போது, வடகொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை, வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்தபோது, தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.