Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் பயண இலக்கும் மாற்றமடையவில்லை | அருட்தந்தை மா.சத்திவேல்

May 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தெற்கின் சமூகம் உணர்ந்தால் மாத்திரமே வடக்குடன் கைகோர்க்க முடியும் | அருட்தந்தை சத்திவேல்

வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (13) அருட்தந்தை மா.சத்திவேல்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஈழத் தமிழர்களின் அரசியல் எழுச்சியையும், அதன் தாகத்தையும், அதற்கான போராட்ட வலிமையையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்க சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரிய போர் தொடுத்து இறுதியில் இனப்படுகொலையை நிகழ்த்தி மனித பேரவலத்தை ஏற்படுத்தினாலும், வடகிழக்கு தமிழர்களின் அரசியல் தாகமும் அது நோக்கிய பயண இலக்கும் மாற்றமடையவில்லை என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலக நாடுகளுக்கு உயிர்ப்பு மிகு சாட்சியாகும்.

எனினும், தமிழர் தேசத்தில் ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் அரசியல், தலைமைத்துவ போட்டிகள் காரணமாகவும் சுகபோக அரசியலுக்காகவும் கொள்கை தடம் மாறியவர்களாலும் அவர்களின் வழிகாட்டலில் இனப்படுகொலையாளர்களுக்கே வாக்களிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதன் குற்றப் பலியை தடம் மாறிய அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவங்களும் ஏற்றேயாக வேண்டும்.

இதன் காரணமாக தமிழ் இன அழிப்பிற்கும், இனப்படுகொலைக்கும் துணை நின்ற பிரதான சக்தி எமது மண்ணில் கோட்டை அமைத்து அதனை விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது. இதற்கு எம்மவர்களே துணை நிற்கும் அரசியல் சூழ்நிலை என் மண்ணில் தோன்றியிருப்பதை அவதானிக்கலாம். இது நாம் அனுபவித்த முள்ளிவாய்க்கால் அவலத்தை விட மிகப் பயங்கரமான அரசியல் அவலத்துக்கே வித்திடும் என்பதை இச்சந்தர்ப்பத்திலாவது அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவம் உணர வேண்டும். இல்லையேல், வரலாறு இவர்களை மன்னிக்காது.

ஆதலால் தமிழர் தேசம் காக்க போராடியவர்கள் இரத்தம் சிந்திய நிலத்தில் நின்று அரசியல் செய்யும் கட்சிகள் தனது வரலாற்று தவறினை திருத்திக்கொள்ளவும் அதன் அடையாளமாகவும் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளில் எவ்வாறு கூட்டாக செயற்படப் போகிறோம் என்று தொடரில் பொது கூட்டு கொள்கை பிரகடனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இக்கூட்டுப் பிரகடனம் எம் தேசத்துக்கும், தேசியத்துக்கும் எதிராக எம் மண்ணில் சதி வலை விரிக்கும் அரசியல் சக்திக்கும் அவர்களின் அரசியல் துணை படையினருக்கும் எமது வலிமையை வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.

யுத்த காலத்தில் படையினரின் மூலம் எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசும் அதன் காவலர்களான ஆட்சியாளர்களும் தாம் உருவாக்கிய அதே கருத்தியல் கொண்ட பல்வேறு திணைக்களங்கள் ஊடாகவும் நேரடியாக விகாரைகளை கட்டியும் நிலங்களை கையகப்படுத்தியவர்கள், தற்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் வளம் மிகுந்த கரையோர பிரதேசங்களை கையகப்படுத்தி எம்மவர்களை நிலமற்றவர்களாக்கி வறுமைக்குள் தள்ளுவதற்கான வர்த்தமானி வெளியிட்டிருப்பது தற்போதைய ஆட்சியாளர்களின் உண்மை அரசியல் கோரமுகத்தினை அம்பலப்படுத்தியுள்ளது.

இதனை கூட்டாக மக்கள் சக்தியோடு எதிர்த்து நிலம் காத்திட அவசர வேலைத்திட்டமும் வேண்டும். இதனை நோக்காகக் கொண்டும் செயற்படுவதற்கான முன்னோடி செயற்பாடாக அடிமட்ட மக்களைத் திரட்டிட நம்பிக்கையூட்டும் செயற்பாடாக உள்ளூராட்சி மன்றங்களின் இயக்கம் தொடர்பில் அரசியல் கொள்கையில் தடம் மாறாத நம்பிக்கை மிகு கொள்கை பிரகடனம் செய்திட கட்சித் தலைவர்கள் முன்வர வேண்டுமென அவசர வேண்டுகோளையும் இவ்வேளையில் விடுக்கின்றோம்.

மீண்டும் கூறுகின்றோம்… கூட்டு அரசியல் பிரகடனம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை தாம் சார்ந்த கட்சி வசப்படுத்துவதற்காவோ, கட்சி அரசியலை பலப்படுத்துவதற்காகவோ, தனிநபர் பிம்பத்தை ஏற்படுத்துவதற்காகவோ அமையக்கூடாது. தாயகம் மற்றும் தேசிய அரசியலை நோக்கிய மக்கள் அரசியலை மையப்படுத்தி, உள்ளூராட்சி சபைகள் மூலம் அபிவிருத்தியோடு மக்கள் அரசியலை முன்னெடுக்க அரசியல் கட்சிகளும் அதன் தலைமைத்துவங்கள் தியாக உணர்வோடு விட்டுக் கொடுப்புகளோடு வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணமாக தமிழர் தேசியம் நோக்கு நிலையினின்று கூட்டுப் பொது பிரகடனம் செய்திட வேண்டும். அதுவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கும் அங்கு ஏற்றும் சுடருக்கும் உயிர் கொடையானவர்களுக்கும் கௌரவமாகவும் வாக்களித்த மக்களுக்கும் தேசத்துக்கும் தேசியத்துக்கும் கவசமாக அமையும் என்பதையும் உறுதியுடன் கூறுகின்றோம் எனத் தெரிவித்தார். 

Previous Post

செப்டம்பரில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’

Next Post

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

Next Post
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் 'மரகத மலை'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures