வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஜப்பானில் செர்ரி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மியுகுரோ ஆற்றங்கரையோரம் பூத்துக்குலுங்கும் செர்ரி மலர்களை காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர்.
மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளை நிறத்தில் இரு கரைகளிலும் கைகோர்த்திருப்பது போல் செர்ரி மலர்கள் பூத்திருக்கும் அழகைக்காண கூட்டம் அலைமோதுகிறது. செர்ரி மலரின் நறுமணத்தில் மயங்குவதுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
இதனால் மியுகுரோ ஆற்றங்கரையோரமே சுற்றுலாத்தளம் போல் காட்சியளிக்கிறது. தற்போது ஜப்பானில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் செர்ரி மலர்கள் அதிகளவில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த வார இறுதியில் செர்ரி மலர்கள் சீசன் முடிவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது