வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முற்றாக நிராகித்துள்ளார்.
அவர் இதுதொடர்பில் கூறியதாவது,
ஒரு வேலையை பாரம் எடுத்தால், அதனை 110 வீதம் சரியாக செய்து முடிக்க வேண்டுமென சிந்திப்பவன் நான். என்னுடைய தொழில்சார் சட்டத்தரணி பணியையும் செய்தபடி வங்கித் தலைவராகவும் இருக்க முடியாது.
பொருத்தமான ஒருவரை, அப்பதவிக்கு நியமிக்குமாறும் குறிப்பிட்டேன்.
அத்துடன் ஜனாதிபதியின் அழைப்பை மிகவும் தாழ்மையுடன் நிராகரித்தேன். எனினும் எல்லா வழிகளிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, ஆதரவு வழங்குவதாக திட்டவட்டமாக அறிவித்தேன்.
மேலும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் என்னை பாராளுமன்றத்திற்கு உள்ளீர்க்க வேண்டுமென்ற சிந்தனை உள்ளது. இதன்மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.

