இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என குறித்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தனியார் வங்கிகள் சிலவும் அடையாள வேலைநிறுத்தம் காரணமாக பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளன.
அரச, அரை அரச , பொது மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பெரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், வங்கித் துறையும் தனது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]