சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடன் பெற்றவர்கள் கோரும் வகையில் கடன்களை செலுத்துவதற்கு வசதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.