வங்கதேசம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டாக்காவில், இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட புதிய விசா மையத்தை திறந்து வைத்தார். இது உலகிலேயே மிகப்பெரிய விசா மையம் என்ற பெயரை எடுத்துள்ளது.
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மையத்தில், விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது செயல்படும், மொடிஜ்ஹீல் மற்றும் உத்தாராவில் உள்ள மையங்கள் புதிய மையத்திற்கு நாளைக்குள் மாற்றப்படும்.
குல்ஷன் மற்றும் மிர்புர் சாலையில் உள்ள மையங்களும், இந்த மையத்திற்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மாற்றப்படும். புதிய மையத்தில், விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மின்னணு டோக்கன் முறையில் டோக்கன் வாங்கும் முறையும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

