ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சுமார் 300 குடியேறிகள் சென்ற லாரி லிபியாவின் பனி வாலித் நகரின் அருகே இன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் சோமாலியாவில் இருந்து புகலிடம் தேடிச் சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.