லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ பாதுகாப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் லிட்ரோ நிறுவனம் நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது.
கடந்த 9 மாதகாலமாக லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காததனால் 10500 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் திறைச்சேரியில் இருந்து நிதி கிடைக்காவிட்டால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
உலக சந்தையில் எரிவாயு ஒரு மெற்றிக் தொன்னினது விலை தற்போது 800 அமெரிக்க டொலர்களினால் அதிகரித்துள்ளது.இவ்வாறான நிலையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் கிரயம் 2021 ரூபாவாக காணப்படுகிறது.
எவ்வாறாயினும் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு தற்போது 1493 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கப்பலுக்கான கட்டணம், காப்பீட்டு தொகை உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக 700 ரூபா செலவாகுகிறது. இதற்கமைய 12.5கிலோகிராம் நிறையுடைய சமையல்எரிவாயு சிலிண்டர் 2800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவினாலும்,5 கிலோகிராம்நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் லாப் ரக எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு சந்தையில் நிலவுகிறது.
லாப் ரக சமையல்எரிவாயுவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமது நிறுவனத்திற்கு சுமார் 8 பில்லியன் நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது ஆகவே 12.5 கிலோகிராம்நிறையுடைய சமையல் எரிவாயு சிலின்டரை 291 ரூபாவினாலும்,5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரை 114 ரூபாவினாலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபையிடம்கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சந்தையில் எரிபொருள்விலை அதிகரித்துள்ள காரணத்தினால் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விற்பனை விலையை அதிகரிக்க நேரிடும். என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]