பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான விமான சேவைகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வான்பரப்பிற்குள் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இலங்கையில் இருந்து அந்நாட்டிற்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்திய விமானப் படை நேற்றையதினம் பாகிஸ்தான் வான்பரப்பிற்குள் ஊடுருவி பாகிஸ்தானின் சில பகுதிகளில் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்தியுள்ளதோடு, இரு தரப்பினரும் கடும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.